Posts

Showing posts from 2016

யுத்தம் நடந்ததா? இல்லையா?

Image
google image  குருக்ஷேத்ரத்தில் யுத்தம் நடந்ததா இல்லையா? பலர் கேட்கும் மிகப் பெரியக் கேள்வி. ஆத்திகர்களும் நாத்திகர்களும்  யுத்தம் பற்றியக் கருத்தில் நிறையவே வேறுபடுவார்கள். நான் அந்த சர்ச்சைக்குள் போகவில்லை. ஆனால்  மகாபாரத யுத்தம் பற்றிய தத்துவ விளக்கம் ஒன்று 'வாட்ஸ் அப் ' இல்  சுற்றி வருகிறது. எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே கணக்குத் தெரியாது. என் மனதைத் தொட்ட விளக்கம் அது. நான் படித்தது ஆங்கிலத்தில். அதைத் தமிழில் படித்தால் மனதிற்கு இன்னும் நெருக்கமாக இருக்குமே என்கிற ஆசைதான்  இப்பதிவு எழுதத் தூண்டியது.  ஆங்கிலத்தில் எழுதியது யார் என்று தெரியவில்லை. அந்த முகம் தெரியாத நண்பருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றிகள் பல. பதிவிற்குள் நுழைகிறேன். குருக்ஷேத்திர யுத்தத்தில் போரிட்ட வீரர்களுள்  பெரும்பாலானவர்கள் வீர மரணம் எய்தினார்கள் என்பது மகாபாரத இதிகாசம் சொல்லும் செய்தி. சஞ்சயன்  போர் முடிந்த பின், குருக்ஷேத்திர  யுத்தம் நடந்த இடத்திற்கு ,.  செல்கிறார். அங்கு பேரமைதி  நிலவுகிறது. " இங்கு தானா யுத்தம் நடந்தது? இங்கு தான் அர்ஜுனரும் கிருஷ்ணரும்